/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளக்காதலியை கொன்று புதைக்க இடம் தேடிய கள்ளக்காதலன் கைது
/
கள்ளக்காதலியை கொன்று புதைக்க இடம் தேடிய கள்ளக்காதலன் கைது
கள்ளக்காதலியை கொன்று புதைக்க இடம் தேடிய கள்ளக்காதலன் கைது
கள்ளக்காதலியை கொன்று புதைக்க இடம் தேடிய கள்ளக்காதலன் கைது
ADDED : மே 11, 2024 09:37 PM
கொடைரோடு:திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தகராறில் கொலை செய்யப்பட்ட பல்லடத்தை சேர்ந்த கள்ளக் காதலி உடலை புதைப்பதற்கு இடம் தேடிய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்த கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கொடைரோடு அருகே பள்ளபட்டி பிரிவில் ரோட்டோரத்தில் நேற்று அதிகாலை 2:20 மணிக்கு நின்ற காரை மதுரை மாவட்ட ரோந்து போலீசார் சோதனை செய்ததில் அதில் இறந்த நிலையில் பெண் உடல் இருப்பதை கண்டனர். அங்கிருந்து தப்ப முயன்றவர்களை பிடித்து அம்மைநாயக்கனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அருண் ஸ்டாலின் மனைவி பிரின்ஸி 27; தனியார் மில்லில் பணியாற்றி உள்ளார். அவருடன் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்த திவாகர் 27, உடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். திவாகரிடம் நகை, பணம் கேட்டு பிரின்சி நச்சரித்து வந்துள்ளார். அட்சய திருதியை அன்று நகை வாங்கி தர அடம் பிடித்துள்ளார். பிரின்சியின் தொந்தரவு தாங்க முடியாத திவாகர் கொலை செய்ய திட்டமிட்டார்.
கயிற்றால் இறுக்கி கொலை
முதுகுளத்துாரில் உள்ள தனது உறவினர் இந்திரகுமார் 28, உதவியை நாடிய திவாகர் அவரது காரை எடுத்துக்கொண்டு பல்லடம் வர கூறி உள்ளார். பிரின்சியை காரில் ஏற்றிய திவாகர் பரிசு தருவதாக கூறி கண்ணை மூட கூறி உள்ளார். கண்ணை மூடிய பிரின்சியின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தார்.
முதுகுளத்துார் செல்லும் வழியில் பிரின்சியின் உடலை புதைக்க உபகரணங்களுடன் காரில் வந்தனர். பாதுகாப்பிற்காக காருக்கு முன் டூவீலரில் திவாகர் சென்றார். காரை பள்ளபட்டி பிரிவு அருகே நிறுத்தி உடலை புதைப்பதற்கு இடம் தேடியபோது போலீசிடம் சிக்கியது தெரிந்தது. அம்மையநாயக்கனுார் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கார், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.