/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பகுதியில் பழுதான 'லொடக்கு' பஸ்
/
மலைப்பகுதியில் பழுதான 'லொடக்கு' பஸ்
ADDED : மே 05, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் அடிக்கடி பழுதாகும் அரசு 'லொடக்கு' பஸ்களால் பயணிகள் அவதியடைகின்றனர்.
இம்மலை பகுதிக்கு வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. இவைகளில் பல பாதி வழியில் பழுதாகி நிற்பதால் பயணிகள் அவதியடையும் நிலை தொடர்கிறது. இது போல் நேற்று ஆடலுாரிருந்து மதுரை சென்ற பஸ் பழுதாகி மஞ்சள் பரப்பில் நின்றது.
நேற்று முன்தினம் திண்டுக்கல்லிருந்து தாண்டிக்குடி மார்க்கமாக கொடைக்கானல் சென்ற பஸ் பெருமாள்மலையில் பழுதானது.
தொடர்ந்து அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.