/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை குவியல் இடையே உழவர் சந்தை ‛ஜரூர்'
/
குப்பை குவியல் இடையே உழவர் சந்தை ‛ஜரூர்'
ADDED : மே 13, 2024 05:58 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார கேடு உருவாவதாக பொதுமக்கள் முகம் சுளித்தனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள ஒரேயொரு உழவர் சந்தை இதுவாகையால் வாடிக்கையாளர் கூட்டம் ஜரூராக' உள்ளது.
இந்த உழவர் சந்தையின் சுகாதாரமானது மேலோட்டமாக நன்றாக காட்சியளிக்கிறது. நுழைவு வாயிலின் இடது புறமாக அழுகிய காய்கறிகளின் குப்பை குவியலானது சுகாதார கேட்டை உருவாக்குவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த குப்பைகள் பலமாதங்களாக அகற்ற படாததால் மலைபோல் குவிந்து வருகிறது. இரவு நேரங்களில் குப்பைகளில் மறைந்துள்ள விஷபூச்சிகளின் தாண்டவம் அதிகம் உள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்ற வேண்டும்.