/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து
/
நத்தம் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து
ADDED : மே 08, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ வித்தில் செங்கல், பொருட்கள் எரிந்தன.
நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்தவர் பாரதி 40. சேர்வீடு பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு செங்கல் கால்வாய் மேல் உள்ள குடிசையில் தீப்பற்றியது.
நத்தம் தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட செங்கல்கள், குடிசை செட்டுகள், பொருட்கள் எரிந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

