/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழைதோறும் நீரில் முழ்கி ஆபத்தாக மாறிடும் நான்கு வழிச்சாலை
/
மழைதோறும் நீரில் முழ்கி ஆபத்தாக மாறிடும் நான்கு வழிச்சாலை
மழைதோறும் நீரில் முழ்கி ஆபத்தாக மாறிடும் நான்கு வழிச்சாலை
மழைதோறும் நீரில் முழ்கி ஆபத்தாக மாறிடும் நான்கு வழிச்சாலை
ADDED : பிப் 25, 2025 06:15 AM

வடமதுரை: வடமதுரையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இரு நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதி ஒவ்வொரு மழைக்கும் முழ்கி வாகன ஓட்டிகளை பரிதவிக்க விடுகிறது.
வடமதுரையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், நத்தம், செந்துறை, வேடசந்துார், திருக்கண், போஜனம்பட்டி பகுதிகளுக்கு ரோடுகள் பிரிந்து செல்கின்றன.
திண்டுக்கல் திருச்சி இடையே மணப்பாறை நகராட்சிக்கு அடுத்த நிலையில் பெரிய ஊராக வடமதுரை இருப்பதால் விரைவு பஸ் சேவையும் தாராளமாக கிடைப்பதால் நகரும் விரைவாக வளர்ந்து வருகிறது.
குடியிருப்புகளும் ரோடுகளையொட்டி பகுதியில் அதிகரித்து வருகிறது. தற்போது ஒன்றியத்தின் தலைமையிடமான இருக்கும் நிலையில் வடமதுரையை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்கும் பணியிலும் ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க இங்கு திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையும், வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையும் குறுக்கிடும் நான்கு வழிச்சாலை சந்திப்பில் ஒவ்வொரு மழைக்கும் நீர் பெருமளவில் தேங்கி ரோட்டையே முழ்கடிக்கிறது.
பல்வேறு முன்னரிக்கை திட்டமிடலுடன் அமைக்கப்பட்ட நான்குவழிச்சாலையில் இப்படியொடு அவலமா என வாகன ஓட்டிகள் முனுமுனுப்புடன் தேங்கிய நீரில் மெதுவாக ஓட்டி செல்கின்றனர்.
ரோட்டோர பள்ளங்கள் இருக்கும் இடம் சரிவர தெரியாமல் போவதால் பள்ளங்களில் வாகனங்கள், நடந்து செல்வோரும் சிக்கும் ஆபத்தும் உள்ளது. இங்கும் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலங்கள் கட்டியும் நோ யூஸ்
ஜெ.பாலமுருகன், தே.மு.தி.க., நகர செயலாளர், வடமதுரை: சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டன்சத்திரம் ரோடு விரிவாக்க பணியில் வடமதுரை இணைப்பு ரோட்டில் இருந்த பாலத்தை விரிவாக்கம் செய்யாமல் மூடிவிட்டனர். திருச்சி ரோட்டில் இருக்கும் பாலத்தில் நீர் மறுபக்கம் வெளியேற வழியின்றி நீர் வழித்தடம் அடைப்பட்டுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் செலவிட்டு பாலங்கள் கட்டியும் மழை நேரத்தில் இப்பகுதியில் நீர் ரோட்டில் பெருமளவில் தேங்கிறது.
தற்காலிக ஏற்பாடாக வாய்க்கால் வெட்டினாலும் ஒருசில நாட்களில் மண்சரிந்து நீர் செல்வது தடைப்பட்டு தேங்கி நிற்கிறது.
கழிவு நீரும் இதனுடன் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் இந்த வழியே நடந்து செல்வோரும் டூவீலர்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.
மேம்பாலம் அமைக்கலாம்
ஆர்.பெருமாள், கார் டிரைவர், கெச்சானிப்பட்டி: அனுமதிக்கப்பட்ட வேகத்தில் போக்குவரத்து விரைவாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் ஒவ்வொரு மழைக்கும் நீர் தேங்கும் அவலம் வடமதுரையில் நடக்கிறது. இப்பகுதி வழியே ரோட்டை கடந்து செல்ல வேண்டிய நீர் தொடர்ந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.
ரோட்டின் மறுபக்கம் நெடுஞ்சாலை இடத்தில் சீராக பயணித்து வெளியேற வழியில்லாத சூழலில் நீர் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதி சந்திப்பில் அதிகளவில் விபத்துக்கள் நடப்பதால் மேம்பாலம் அமைக்க வேண்டும்.