/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் தரையிறங்கிய மேகக் கூட்டம்
/
'கொடை'யில் தரையிறங்கிய மேகக் கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தரையிறங்கிய மேகக் கூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
தொடர் மழையால் கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை ,சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். தரையிறங்கிய மேகக் கூட்டத்தை பயணிகள் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.