/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் நுாதன போராட்டமாக நடந்த மாதிரி பேரூராட்சி கூட்டம்
/
அய்யலுாரில் நுாதன போராட்டமாக நடந்த மாதிரி பேரூராட்சி கூட்டம்
அய்யலுாரில் நுாதன போராட்டமாக நடந்த மாதிரி பேரூராட்சி கூட்டம்
அய்யலுாரில் நுாதன போராட்டமாக நடந்த மாதிரி பேரூராட்சி கூட்டம்
ADDED : ஜூலை 05, 2024 05:48 AM

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சியின் 5வது வார்டு பகுதியில் பாலத்தோட்டம், கிணத்துபட்டி, நரியாழதத்தோட்டம், செங்களத்துபட்டி, தொட்டியூர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளன.
அதிருப்தி மக்கள் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகளுடன் பேரூராட்சி அலுவலகம் அருகில் மாதிரி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடத்தினர்.
மாதிரி தலைவர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள் என பலகையில் எழுதி அடையாளப்படுத்தி கொண்டு பேசினர்.
வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன், மாவட்ட பொறுப்பாளர் காசி முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் பூமி, மாவட்ட செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ராசு, மாநில பிரதிநிதி மாரியப்பன் பங்கேற்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் தங்கள் பகுதி கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்த முன்வராவிடின் அடுத்த மாதம் அலுவலகத்திற்கு சென்று மாதிரி கவுன்சில் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.