/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சர்ச் விழாவில் குழந்தைகள் ஏலம் விடிய விடிய நடந்த அசைவ விருந்து

ADDED : ஆக 07, 2024 05:57 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறமுள்ள முத்தழகுபட்டி செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வுடன் காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிக்கறிகளை கொண்டு விடிய விடிய அசைவ விருந்தும் நடந்தது.
இந்த சர்ச்சில் ஆண்டுதோறும் ஆடியில் 4 நாட்கள் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா ஆக., 4 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சிறப்பு திருப்பலி, புனிதருக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறிகளை காலை முதல் மாலை வரை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.
மாலை 6 :00 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிக்கறிகளுடன் அசைவ விருந்து துவங்கி விடிய விடிய நடந்தது. திண்டுக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
குழந்தைகள் ஏலம்
விழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை ஏலம் விடுதலும் நடந்தது. இதில் குழந்தைகள் வேண்டியும், குழந்தைகள் உடல்நலம் சரியாக வேண்டியும் சர்ச்சில் குழந்தைகளை ஏலம் விடுவதாக பெற்றோர் வேண்டி அதன்படி நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளின் உறவினர் ஒருவர் ஏலம் எடுக்க அதன் தொகையை சர்ச்சில் செலுத்தினர்.