/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டெலிபோன் கம்பத்தில் மின் பாதை; காத்திருக்கு ஆபத்து
/
டெலிபோன் கம்பத்தில் மின் பாதை; காத்திருக்கு ஆபத்து
டெலிபோன் கம்பத்தில் மின் பாதை; காத்திருக்கு ஆபத்து
டெலிபோன் கம்பத்தில் மின் பாதை; காத்திருக்கு ஆபத்து
ADDED : ஆக 22, 2024 03:40 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப் பகுதியில் மின்கம்பத்திற்கு பதில் டெலிபோன் கம்பத்தில் மின் ஒயர் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கே.சி.பட்டி ஊராட்சியில் வேங்கடிஏற்றம், வெக்கடிக்காடு பகுதிகள் உள்ளன. 2018 கஜா புயலின் போது மரங்கள் வேரோடு சாய்ந்து ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்தன. பாதித்த பகுதியில் புதிய மின்கம்பங்கள் ஊன்ற மின்சப்ளை சீர் செய்யப்பட்டன. வேங்கடி ஏற்றம், வெக்கடிக்காட்டிற்கு மின்கம்பம் பற்றாக்குறையால் ஐந்துக்கு மேற்பட்ட டெலிபோன் கம்பத்தை ஊன்ற வீடுகளுக்கான மின்பாதை செல்கிறது. விபத்து அபாயத்தில் உள்ள இக்கம்பம் ரோட்டோரம் தாழ்வாகவும், புதர் மண்டிய செடிகளில் ஒயர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், கால்நடைகள்,தோட்ட வேலியில் மின்கசிவு ஏற்பட்டு விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. விதிமுறைகள் படி டெலிபோன் கம்பத்தில் மின்ஒயர் செல்வது தவறு என்ற நிலையில் மின்வாரியத்தினர் அலட்சியத்துடன் மின்சப்ளை அளித்துள்ளனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.