/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தொட்டி இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி
/
தண்ணீர் தொட்டி இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி
தண்ணீர் தொட்டி இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி
தண்ணீர் தொட்டி இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி
ADDED : செப் 04, 2024 06:51 AM
ஆயக்குடி : பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி ஊராட்சியில் மேல்நிலைத் தொட்டி இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் பலியானார்.
ஆயக்குடி கணக்கம்பட்டி ஊராட்சியில் பழமையான மேல்நிலைத் தொட்டி இடிக்கும் பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வந்தன. இதன் பணியில் கரூர் மாவட்டம் பாலவிடுதியை சேர்ந்த இளையராஜா 35, சி.கா. புதுரைச் சேர்ந்த வடிவேல் 46, சேங்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகர் 40 ஈடுபட்டனர்.
நேற்று தொட்டியின் மேல் பகுதியை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது மேற்பகுதி இடிந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. இதுன் இடிபாடுகளில் சிக்கி இளையராஜா இறந்தார். அவரை தீயணைப்பு துறை , போலீசார் இணைந்து மீட்டனர். வடிவேல் ,குணசேகர் இருவரும் பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.