/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் துறைக்கு வந்த சோதனை: மின்கட்டணம் செலுத்த முடியாது திணறும் ஊராட்சிகள்: ரூ.10 லட்சம் - 40 லட்சம் பாக்கியால் வசூலில் சிக்கல்

ADDED : மார் 13, 2025 05:35 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, அலுவலக பயன்பாடு என மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. வறட்சி காலங்களில் குடிநீர் மின் மோட்டார்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை நுாற்பாலைகள், கல்குவாரிகள், தொழிற்சாலைகள் என நகர் பகுதி குடியிருப்புகளை உள்ளடக்கிய ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே முறையாக செலுத்தி வருகின்றன.
80 சதவீத ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு தேவையான கட்டணத்தை ஊராட்சி நிர்வாகங்கள் செலுத்த முடியாமல் நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ளன.
ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பாக்கியுள்ளது. பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் பாக்கி இருந்தால் உடனே மின் இணைப்பை துண்டிக்கும் மின்வாரியம் ஊராட்சிகளில் உள்ள மின் கட்டணம் பாக்கிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதனால் ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள மின் கட்டண பாக்கியை வசூல் செய்ய முடியாமல் மின்வாரியமும், மின் கட்டணம் பாக்கி செலுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகங்களும் திணறி வருகின்றன.