/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கின்னஸில் இடம் பெற தினமும் 3 முறை 300 நாட்களாக மலையேறிய இளைஞர்
/
கின்னஸில் இடம் பெற தினமும் 3 முறை 300 நாட்களாக மலையேறிய இளைஞர்
கின்னஸில் இடம் பெற தினமும் 3 முறை 300 நாட்களாக மலையேறிய இளைஞர்
கின்னஸில் இடம் பெற தினமும் 3 முறை 300 நாட்களாக மலையேறிய இளைஞர்
ADDED : ஆக 17, 2024 01:49 AM

ஒட்டன்சத்திரம்:கின்னஸ் சாதனைக்காக 3825 அடி உயரமுள்ள திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொண்டறங்கி கீரனுார் மலை மீது தினமும் மூன்று முறை என 300 நாட்கள் தொடர்ந்து ஏறி இறங்கி சாதனை படைத்துள்ளார் திருப்பூர் மாவட்ட இளைஞர் கோபாலகிருஷ்ணன் 24.
திருப்பூர் மாவட்டம் மூலனுார் அருகே புத்துாரைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி குமாரவேல் - பாக்கியம் தம்பதி மகன் கோபாலகிருஷ்ணன். இவர் கல்லுாரி படிப்பை முடித்து விட்டு பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இவருக்கு கொண்டறங்கி கீரனுார் மலை மீது ஏறி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதனை நிறைவேற்றும் வகையில் 2023 அக்டோபரில் கொண்டரங்கி மலையேற தொடங்கினார். 3825 உயரம் உள்ள இந்த மலையை தினமும் மூன்று முறை ஏறி இறங்கி வருகிறார். நேற்று 300வது நாள் ஆகும். தினமும் காலை 6:00 மணிக்கு மலை ஏற தொடங்கும் கோபாலகிருஷ்ணன் 90 நிமிடங்களில் மூன்று முறை ஏறி இறங்கி விடுகிறார்.
காலில் செருப்பு இல்லாமல் ஒரு கையில் அலைபேசியை பிடித்தவாறு செங்குத்தாக இருக்கும் மலையை 20 நிமிடத்தில் ஏறி, 10 நிமிடத்தில் இறங்கி விடுகிறார்.
இவரது கின்னஸ் சாதனை வெற்றியடையும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாடுவது என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

