/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசியல் செல்வாக்குகளால் புதிதாக முளைக்கும் 'ஆவின்'
/
அரசியல் செல்வாக்குகளால் புதிதாக முளைக்கும் 'ஆவின்'
அரசியல் செல்வாக்குகளால் புதிதாக முளைக்கும் 'ஆவின்'
அரசியல் செல்வாக்குகளால் புதிதாக முளைக்கும் 'ஆவின்'
ADDED : ஜூலை 17, 2024 12:26 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தி முறையான அனுமதியின்றி கண்ட இடங்களில் ஆவின் டீக்கடைகள் புதிது புதிதாக அமைக்கப்படுகிறது. இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம்,ஆவின் நிர்வாகம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். மாவட்ட நிர்வாகம்தான் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் நகரில் ஆவின் நிர்வாகம் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று பஸ் ஸ்டாண்ட்,பழநி ரோடு, திருச்சிரோடு, மதுரை ரோடு என பல்வேறு பகுதிகளில் ஆவின் கடைகள் செயல்படுகிறது. இங்கு ஆவின் பொருட்களை தான் விற்க வேண்டும். ஆனால் அதை விட்டு வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட பொருட்களுடன் டீக்கடையாக நடத்துகின்றனர். ஆவின் நிர்வாகம் கண்டுகொள்ளாது வேடிக்கை பார்க்கிறது. ஆவின்,மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி வாங்காமல் சிலர் அந்தந்த ஏரியா ஆளும் கட்சி கவுன்சிலர்களை கைக்குள் போட்டுக்கொண்டு நினைத்த இடத்தில் ஆவின் பெயரில் டீக்கடைகளை நடத்தி வருகின்றனர்.
இங்கு டீக்குடிக்க வரும் மக்கள் டூவீலர்களை ரோட்டோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர். அதிகாரிகள் கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தடுக்கின்றனர்.
அனுமதி பெறாமல் செயல்படும் கடைகளை கண்டறிந்து அதனை அகற்ற ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதோடு அனுமதி பெறாமல் நடத்துவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
டாக்டர் வாணீஸ்வரி,ஆவின் பொதுமேலாளர்,திண்டுக்கல்: அனுமதி பெறாமல் எங்கேயும் ஆவின் கடைகள் இல்லை. புகார்கள் வந்தால் நகர் முழுவதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜெயக்குமார்,மாநகராட்சி மாநகர திட்டமிடுநர்,திண்டுக்கல்: அனுமதி பெறாமல் உள்ள ஆவின் கடைகளை கண்டறிந்து அகற்றப்படும் என்றார்.