sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

/

கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்


ADDED : செப் 14, 2024 05:24 AM

Google News

ADDED : செப் 14, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: -கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் சாலையோர வாரச்சந்தை கடைகளாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள பள்ளத்தால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கோபால்பட்டியில் இருந்து அய்யாபட்டி செல்லும் ரோட்டில் வேம்பார்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி, கோம்பைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கோபால்பட்டி மையப் பகுதியாகவும், நகர் பகுதியாகவும் உள்ளதால் பொருட்கள் வாங்க கிராம மக்கள் அதிகம் வருவதால் இச்சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது.

கோபால்பட்டி சாலையில் சிலர் கடைகள் அமைத்தும், வாரச்சந்தை கடைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவு நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவதுடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக வார சந்தை நாட்களில் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து சாலையின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. சந்தை கடைகளை சாலைகளில் அமைக்காமல் சந்தைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் கோபால்பட்டியில் திண்டுக்கல்- நத்தம் நெடுஞ்சாலையில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் சாலையின் பெரும்பகுதி சேதம் அடைந்து ஆபத்தான பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தால் இப்பகுதியில் செல்லும் பள்ளி வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இரவு நேரங்களில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளத்தால் விபத்து


கி.தனபாண்டியன், மாநிலச் செயலாளர், மூவேந்தர் புலிப்படை, மணியக்காரன்பட்டி: நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் ஆபத்தான பள்ளம் பல மாதங்களாக உள்ளது. பல மாதங்களாக உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுத்து நிறுத்துங்க


முருகேசன், சமூக ஆர்வலர், கோபால்பட்டி: கோபால்பட்டியில் வார சந்தைக்கு என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும் பாலான கடை உரிமை யாளர்கள் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். சாலை யில் வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. சாலையோரம் கடைகள் அமைக்கப்படுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்


பாலமுருகன், டிரைவர், மணியக்காரன்பட்டி: சாலையில் வாகனங்கள்,ஆட்டோக்கள் அதிகளவு நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் விபத்துகள் அதிக அளவு நடக்கிறது. மேலும் சாலை நெடுகிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us