/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இணைப்பு ரோட்டில் நிற்கும் வாகனங்களால் விபத்துக்கள்
/
இணைப்பு ரோட்டில் நிற்கும் வாகனங்களால் விபத்துக்கள்
இணைப்பு ரோட்டில் நிற்கும் வாகனங்களால் விபத்துக்கள்
இணைப்பு ரோட்டில் நிற்கும் வாகனங்களால் விபத்துக்கள்
ADDED : டிச 09, 2024 06:01 AM
வடமதுரை: திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையிலிருந்து விலகி வடமதுரை நகர் பகுதி தனியே இருப்பதால் தேவையற்ற கனரக வாகன போக்குவரத்து பிரச்னை ஊருக்குள் கிடையாது. நகர், புறநகர் பஸ்கள் அடிக்கடி வந்து செல்லும் போக்குவரத்து வசதி தாராளமாக இருப்பதால் நகரும் நல்ல வளர்ச்சி வேகத்தில் உள்ளது. திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையுடன் நகரை இணைக்க அகலமான மாநில நெடுஞ்சாலை உள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று பஸ்கள் செல்லுமளவில் அகலமாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் பை-பாஸ் ரோட்டை இணைக்கும் ரோட்டில் வரைமுறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால், ரோட்டில் மண் கொட்டி வாகனங்களின் போக்குவரத்தை தங்கள் கடைகளுக்கு அருகில் வராமல் தடுக்கும் செயலில் வியாபாரிகள் ஈடுபடுகின்றனர்.
இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல நேரம் விபத்துகளும், சண்டை சச்சரவுகளும் நடக்கின்றன. இணைப்பு ரோட்டில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற நெடுஞ்சாலைதுறையினரும், ரோட்டின் மீது நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.