ADDED : மே 12, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை சாய் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி , பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது.
இந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் இச்சாதனை தொடர்கிறது. மாணவி கே.தீபக் 476 மதிப்பெண்களுடன் முதலிடம் ,மாணவி எஸ்.தருணிகா 474 மதிப்பெண்களுடன் 2ம் இடம் ,மாணவர் டி.முகமது இஸ்ஹாக் 466 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்றார். 450 மதிப்பெண்களுக்கு மேல் 6 , 400க்கு மேல் 18 மாணவர்களும் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் திலகம் சிவக்குமார், முதல்வர் மகாலட்சுமி, துணை முதல்வர் சரண்யா, சேரன் வித்யாலயா பள்ளி மேலாளர் பாரதிராஜா பாராட்டினர்.