/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் செய்தியுடன் சேர்க்கவும் ..
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் செய்தியுடன் சேர்க்கவும் ..
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் செய்தியுடன் சேர்க்கவும் ..
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் செய்தியுடன் சேர்க்கவும் ..
ADDED : ஜூலை 04, 2024 02:25 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆசிரியர்கள் பஸ்சில் ஏற்றப்பட்ட நிலையில் கைது இல்லை எனக்கூறி கீழே இறக்கிவிடப்பட்டனர்.இதன் பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகவேலுவிடம் கோரிக்கைகளை எடுத்துக் கூற அனுமதித்த போலீசார் தடுப்புகளை அகற்றினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கணேசன் கூறியதாவது:
ஒட்டு மொத்த ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243 ஐ தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில உயர்மட்ட குழு கூடி முடிவெடுக்கும், என்றார்.