/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் சிலைகளை கரைக்க கூடுதல் இடங்கள்
/
விநாயகர் சிலைகளை கரைக்க கூடுதல் இடங்கள்
ADDED : செப் 05, 2024 04:14 AM
திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, வத்தலக்குண்டு கண்ணாப்பட்டி ஆறு, ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, பழநி சண்முகாநதி, வேடசந்துார் குடகனாறு, நத்தம் அம்மன்குளம், கொடைக்கானல் டோபிகானலில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரைக்கும் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வடமதுரை நரிப்பாறை நீர் நிலை, குஜிலியம்பாறை பங்களாமேடு குளம், கன்னிவாடி மச்சகுளம், சின்னாளப்பட்டி தொம்மன்குளம், தாடிக்கொம்பு குடகனாறு, பட்டிவீரன்பட்டி மருதாநதி அணை, எரியோடு நந்தவனக்குளம், சாணார்பட்டி மதனக்குளம், ரெட்டியார்சத்திரம் மாங்கரைகுளம் ஆகிய இடங்களிலும் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.