/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முனீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா
/
முனீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா
ADDED : ஆக 03, 2024 05:06 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி முனீஸ்வரர்,ராஜவிநாயகர் கோயில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நடந்த மஞ்சள் நீராட்டு , பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
என்.ஜி.ஓ.,காலனி முனீஸ்வரர்,ராஜ விநாயகர் கோயிலில் ஆடிப்பெருக்கு உற்ஸவ விழா நடந்தது. 3 நாட்கள் நடக்கும் விழாவில் நேற்று முன்தினம் காலை சிறப்பு வழிபாடு ,தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு ,மாலையில் வேல் அழைப்பு,அலகு குத்தி அக்னி சட்டி எடுத்தல் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மாடு,மயில்,கரகாட்டம்,தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் இரவு அன்னதானம் நடந்தது. நேற்று மதியம் சைவ அன்னதானம் ,இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது .ஏற்பாடுகளை குருஜெகநாதன்,குணசேகரன் ,பால்பாண்டி செய்திருந்தனர்.