/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை
/
ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை
ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை
ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை
ADDED : ஆக 24, 2024 04:16 AM
நிலக்கோட்டை: - வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமதுவுக்கு ஓராண்டு சிறை தண்டனை , அபராதம் விதித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன் தீர்ப்பளித்தார்.
வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமது 47, தமிம் அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி இணைந்து தாக்கினர். இதன் வழக்கு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனை , ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.