நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: செப்டிக் டேங்க் ஆப்பரேட்டர்,உரிமையாளர்,டிரைவர்,பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாநகர நல அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் தியாகராஜன்,சுகாதார அலுவலர்கள் கிருஷ்ணராஜ்,ஜான்பீட்டர்,விஜய்ஆனந்த்,சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டீபன்,ரஞ்சித்,லீலாபிரியா பங்கேற்றனர்.
செப்டிங் டேங்க் ஆப்பரேட்டர்கள் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். உரிமம் முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.