sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா 'ஏழரை' தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் 'கழுவி ஊத்திய' முதியவர்

/

வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா 'ஏழரை' தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் 'கழுவி ஊத்திய' முதியவர்

வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா 'ஏழரை' தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் 'கழுவி ஊத்திய' முதியவர்

வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா 'ஏழரை' தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் 'கழுவி ஊத்திய' முதியவர்

7


UPDATED : டிச 24, 2024 07:32 AM

ADDED : டிச 24, 2024 07:20 AM

Google News

UPDATED : டிச 24, 2024 07:32 AM ADDED : டிச 24, 2024 07:20 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : போலி பட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்த முதியவர், ''மனு கொடுத்தா மனுவ காணோம் என்கிறார்கள். சி.ஏ., படிச்ச முட்டாள் நான். கேடு கெட்ட நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன்,'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் 60. இவரது சகோதரர் சீனிவாசன் வீட்டை போலி ஆவணங்கள் மூலமாக இடித்த அதே பகுதியை சேர்ந்தவர் மீதும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி 2016 ல் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எரியோடு தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தார். மனுவை காணவில்லை என கூறினர். ஆண்டுகள் பல கடந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.

குறை தீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் இடத்தில் வரிசையில் நின்ற அவர் அரசு அதிகாரிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டி உரத்த குரலில் ஆவேசமாக கத்தினார்.

''எத்தனை வருஷமா மனு கொடுக்குறது... 8 வருஷமா போராடிகிட்டு இருக்கேன். அதிகாரிகள் நிர்வாகம் செய்வது சரியில்லை. எங்களை துாக்கில் போடுங்கள். நீங்களெல்லாம் எங்களுடனேயே இருந்து, வாழ்ந்துகிட்டு ஒன்னும் செய்யல. சுதந்திரத்திற்காக உயிரை விட்டவன் எல்லாம் எங்கே போறது. திருட்டு பத்திரத்திற்கு மனு கொடுத்தவனுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. 8 வருஷமாக போராடுறேன். என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாமே போய்விட்டது. ஒவ்வொரு அதிகாரிக்கும் 150 முறைக்கு மேல் மெயில் அனுப்பியிருக்கிறேன். யாரும் செவி சாய்க்கல. நான் படித்தது எதற்காக. சீ... கேவலம். படித்துதான் வேலைக்கு வந்திருக்கிறீர்களா... என் வயிறு எரியுது. என் துாக்கம் போச்சு. 30 வருட படிப்பு போச்சு. தெருத் தெருவாய் அலைஞ்சி, 10 ரூபாய் சம்பாரிச்சு படிச்சேன். ஊழல் பெருத்துப்போச்சு. அதிகாரிகளே என்னை துாக்கில் போடுங்க. எல்லா இடங்களிலும் பொய்தான். தமிழகத்தில் நிர்வாகம் சரியில்லை.

அரசியல்வாதியை குறை சொல்ல மாட்டேன். அதிகாரிகள் தான் நிர்வாகம் செய்கிறீர்கள். மனு கொடுத்தா மனுவ காணோம் என்கிறார்கள். உங்களின் காலை கழுவி குடிக்க வேண்டுமா. இனிமேல் ஆபீசுக்கு வராதீங்கனு சொல்லுங்க. இல்லனா பணக்கட்டோட வாங்கனு சொல்லுங்க. சி.ஏ., படிச்ச முட்டாள் நான். மோசமான நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன். பூராம் பொய். ↔தொடர்ச்சி 7ம் பக்கம்பூராம் நாடகம். இங்க அதிகாரிகள் மோசம்,'' என்றார்.

முருகன் உரத்த குரலில் பேசியபோது மனு கொடுக்க வந்த சிலரும் அவருக்கு ஆதரவாக பேசினர். முருகன் சத்தமிட்டபோது பெண் போலீஸ் தடுக்க முயற்சித்தார்.

மற்ற போலீசார் முருகனை தனித்துணை கலெக்டர் கங்காதேவியிடம் அழைத்து சென்றனர். அப்போதும் அவர் ஆவேச குரலில் தனது குறைகளை கூறி கொண்டிருந்தார்.

முருகனின் ஆவேச பேச்சு குறித்து அவரிடம் கேட்டபோது, எனது சகோதரர் சீனிவாசன் 7 ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் 2012ல் ஒரு சென்ட் இடம் எரியோடு பகுதியில் வாங்கினார். ஆனால் அதை போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கும் நோக்கோடு அப்பகுதியில் உள்ள வீட்டையும் ஒருவர் இடித்துள்ளார். இதுகுறித்து மின்வாரியம், வருவாய்த்துறை, நில அளவை துறை, காவல்துறை, முதல்வர் தனிப்பிரிவு, உங்கள் ஊரில் உங்களைத் தேடி, இமெயில் மூலமாகவும் இதுவரை 141 மனுக்கள் அனுப்பி உள்ளேன். கடைசியாக ஆர் .டி. ஓ., வை கேட்டபோது அனுப்பிய மனுவை காணவில்லை என பதில் கூறுகிறார். நீதிமன்றத்திற்கு செல்வதற்காக, கடைசியாக கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மனு அளிக்க வந்து பார்த்த போது தான் படிக்கத் தெரியாத பலர் இது போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன் . அதனால்தான் ஆவேசமடைந்து பேசினேன்.

தற்போது மீண்டும் ஆர்.டி.ஓ., விசாரிப்பதாக தெரிவித்தனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்ததன் அடிப்படையில், கலெக்டர் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது என பார்ப்போம் என்றார்.

ஒரே நாளில் 5 பேர் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பழைய கன்னிவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி காளியப்பன் 48, டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அவர் கூறுகையில், எனது பூர்வீக நிலத்தை அளவீடு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றேன் என தெரிவித்தார்.இது நடந்த சில நிமிடங்களில் திண்டுக்கல் கொசவப்பட்டியை சேர்ந்த அருள் ஆனந்தம் பாஸ்கர் 48, உறவினர் ஜேசுதாஸ் 55, தம்பி சவரிமுத்து 50 , மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களும் போலீசாரால் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்ததால் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.இதை தொடர்ந்து சிலுவத்துாரையைடுத்த காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமுருகன் 50, தனது விவசாய நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதுடன், மனைவி, குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனக்கூறி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்தனர். தீக்குளிக்க முயன்ற 5 பேரையும் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்துச் சென்றனர்.








      Dinamalar
      Follow us