/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
/
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 14, 2024 07:12 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்றுலா தலத்தின் இருதயமாக இருப்பது அண்ணா சாலை 8வது வார்டாகும். இங்கு முதலியார்புரம், அண்ணா சாலை, பி. டி., ரோடு, லாஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் என எப்போதும் ஜனரஞ்கமான பகுதியாக இந்த சாலை உள்ளது.
இந்த வார்டில் வருவாய் துறை, போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, கருவூலம், வங்கிகள், தனியார் விடுதிகள், உணவகம் என நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
வார்டில் தூர்வாரப்படாத சாக்கடை, பட்டா இல்லாத அவலம் , போக்குவரத்து இடையூறு, குடிமகன்களின் அட்டூழியம் என ஏராளமான பிரச்னைகள் குவிந்துள்ளன.
சேதத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்
வி. எஸ். கோவிந்தன், நகராட்சி முன்னாள் தலைவர்: வார்டில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது. தெருவில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது இதனருகே உள்ள அரசு நிலமும் புதர்மண்டி உள்ளன.
நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்கும் தொழுவம் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. வார்டில் தெரு இணைப்பு ரோடு, அண்ணாசாலையை ஆக்கிரமித்துள்ளனர்.
சாக்கடை பள்ளத்தால் விபத்து
பாலசுப்ரமணி, வணிகர் சங்க நகர பொருளாளர்: சந்தையில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளதால் இங்கு வருகை தருவோர் அவதிப்படுகின்றனர்.
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உள்ளூர், வெளியூர் நபர்கள் அவதிப்படுகின்றனர். இந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். அரசு குடியிருப்பு புதர் மண்டி , தெருவிளக்கு ஏரியாத நிலை உள்ளது. வருவாய் குடியிருப்பு பகுதி புதர்மண்டி உள்ளதால் காட்டு மாடுகள் ,சமூக விரோத செயல்கள் அறங்கேறுகின்றன. அண்ணா சாலையில் தோண்டப்பட்ட சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.
எரியாத தெருவிளக்குகள்
தமிழ் செல்வி, கூலித்தொழிலாளி: தாங்கள் வசிக்கும் பகுதியில் கழிப்பறை வசதியின்றி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் அவலமும், காந்திபுரம் செல்ல வேண்டியதுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு இன்றி பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் எரியாத நிலை உள்ளது. சாக்கடை வசதியின்றி கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
அப்பாஸ், கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் ரூ.14 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கொண்டித் தொழுவம் வருவாய்த்துறை வசம் உள்ளதால் தாசில்தார் மனு அளிக்கப்பட்டு சீரமைக்கப்படும்.
வி.ஏ.ஓ., அலுவலகம் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளின் ஒழுங்கினமான செயல்கள் குறித்து போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
கழிப்பறை இல்லாதவர்களுக்கு விரைவில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும். அண்ணா சாலையில் நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதையாக கோரிக்கை விடுத்துள்ளேன். அண்ணா சாலை,தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.