/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடங்கியது அக்னி வெயில்; -மாவட்டத்தில் தொடரும் 105.8 டிகிரி
/
தொடங்கியது அக்னி வெயில்; -மாவட்டத்தில் தொடரும் 105.8 டிகிரி
தொடங்கியது அக்னி வெயில்; -மாவட்டத்தில் தொடரும் 105.8 டிகிரி
தொடங்கியது அக்னி வெயில்; -மாவட்டத்தில் தொடரும் 105.8 டிகிரி
ADDED : மே 05, 2024 04:32 AM
திண்டுக்கல், |; அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நேற்று தொடங்கிய நிலையில் திண்டுக்கல்லில் 105.8 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.ஏற்கனவே வெப்பத்தால் தவிக்கும் மக்கள் மேலும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது அந்த வகையில் அக்னி வெயில் நேற்று தொடங்கியது. மே 28- வரை 25 நாட்கள் நீடிக்கிறது.
எப்போதுமே அக்னி வெயிலில்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையே சதம் அடித்து கொண்டிருப்பதால் அக்னி தாக்கமும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
பகல் வெயிலால் இரவில் உஷ்ணம்
வரப்போகும் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்குமா என தெரியவில்லை. தற்போது தென் மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய துவங்கி உள்ளது.இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடிலில்லை. திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் மார்ச் துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஏப். 2 வது வாரம் முதல் உச்சத்தில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கி வருகின்றனர். பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் அவ்வப்போது ஏற்படும் மின்தடை கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன் ஏப். 28 ல் 103.28 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியிருந்தது. மே 1 ல் 105.8, மே.3ல் 104.18 டிகிரி பாரன் ஹீட் பதிவான நிலையில் அக்னி வெயில் தொடங்கிய நேற்று 105.8 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியிருந்தது. கடந்த ஒரு வாரமாகவே 103.28 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியிருந்தது. வரும் நாட்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
நிழற்பந்தல் அமைக்கலாமே
எனவே பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்ப்பது மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. பெரு நகரங்கள் போல் சிக்னல்களில் நிழற்பந்தல் அமைப்பதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் சிக்னல் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வரும் இடங்களில் நிழற்பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். விவசாய பகுதிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கூடுதல் நடவடிக்கைகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலா, ஆன்மிகம் நிறைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.