நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு கிராமம் தழுவிய பயிற்சி முகாம் வேளாண் உதவி இயக்குனர் கவுசிகாதேவி தலைமையில் நடைபெற்றது.
தேசிய மின்னனு வேளாண் சந்தை, குளிர்பதன கிடங்கு பயன்பாடு, பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மேலாண்மை, உயிர் உரங்கள் பயன்பாடு, மண்வள அட்டை பயன்பாட்டின் முக்கியத்துவம், மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
உழவர் பயிற்சி நிலைய அலுவலர் ரேஷ்மா, வேளாண் அலுவலர் கவிப்பிரியா, அட்மா திட்ட அலுவலர்கள் குணசுந்தரி, துரை உதவி வேளாண் அலுவலர் அப்துல் ஜலீல்ராஜா பங்கேற்றனர்.