ADDED : ஆக 12, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை சிங்காரக்கோட்டையில் இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் சார்பில் நஞ்சில்லா விவசாய தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடத்தினர்.
ஊராட்சி தலைவர் விநாயகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் முன்னிலை வகித்தார். இசை வள மேலாண்மை குழு நிர்வாகி பிச்சைமுத்து வரவேற்றார். முதன்மை செயல் அலுவலர் ஜான்கென்னடி, முன்னோடி இயற்கை விவசாய பயிற்சியாளர் செபஸ்தியான் பயிற்சி தந்தனர். வீரமணி நன்றி கூறினார்.

