/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நீக்கம்
/
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நீக்கம்
ADDED : மார் 03, 2025 06:35 AM
வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த மோகன், 25 ஆண்டுகளுக்கு மேலாக வத்தலக்குண்டு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராகவும், பின்னர் பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் இவரது மகன் அருண்குமார் பன்னீர்செல்வம் அணியிலும், இவர் அ.தி.மு.க.,விலும் செயல்பட்டனர். மோகன் இல்ல நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்று மோகன் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மோகன் ஆதரவாளர்களுடன்பெரியகுளத்தில் பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவில் இணைந்தார்.