/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க: ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை நிறுத்தம்
/
இதையும் கவனியுங்க: ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை நிறுத்தம்
இதையும் கவனியுங்க: ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை நிறுத்தம்
இதையும் கவனியுங்க: ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை நிறுத்தம்
ADDED : ஆக 23, 2024 05:03 AM

தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. 1.85 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு, காஸ் இணைப்பு உண்டு. மின் இணைப்பு, காஸ் இணைப்பு இல்லாத பயனாளிகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் வாங்கும் பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால் அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் விநியோகம் சமீப காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடை ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தலைமையிட பங்க் சென்று மண்ணெண்ணெய் பெற்று பயனாளிகளுக்கு சப்ளை செய்யும் நிலை உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு கடைக்கு குறைந்தது 40 லிட்டர் முதல் அதிகபட்சம் 100 லிட்டர் வரை மட்டுமே விநியோகம் நடைபெறுகிறது.
இந்த மண்ணெண்ணையை நேரடியாக ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் ஊழியர்களை அலைக்கழிக்க செய்வதும் தொடர்கிறது . கரூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் அந்தந்த கடைகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படுகிறது .
இது போன்று இங்குள்ள கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகத்தை நேரடியாக அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கே விநியோகம் செய்ய வேண்டும் .இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.