/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க சார்: பொது கழிப்பறைகளை பராமரிக்காது அலட்சியம்: திறந்தவெளி கழிப்பிடங்களால் பரவுகிறது தொற்று

ADDED : ஏப் 16, 2024 06:43 AM

மாவட்டத்தில் நகரங்கள் , கிராம பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் பழக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மத்திய, மாநில அரசுகள் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் திறந்தவெளி கழிப்பிடம் இன்றும் தொடர்ந்து படி தான் உள்ளது.
இப்பழக்கத்தை ஒழிக்க முடியவில்லை. விழிப்புணர்வு இல்லாதது ஒருபுறம் இருக்க சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருப்பதே முக்கிய காரணியாக உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பஸ்ஸ்டாண்ட்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பறைகள் சுகாதாரமின்றி நோய் தொற்றுக்கு வலி வகை செய்யும் வகையில் உள்ளது. தொடரும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இட வசதி உள்ளவர்களுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனி நபர் கழிப்பறை கட்ட வசதி இல்லாத வீடுகளுக்கு பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இன்னும் பல உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான இடங்களில் சமுதாய சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டி உள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களில் இதற்கான இடம் இல்லாததால் கட்டப்படாமல் உள்ளது.
சமுதாய சுகாதார வளாகங்கள் இல்லாத பகுதிகளில் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சில ஊராட்சிகளில் சமுதாய சுகாதார வளாகங்கள் அசுத்தமாக இருப்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் சாலை ஓரங்கள், வாய்க்கால் வரப்புகள், ரயில்வே தண்டவாளங்கள் , ரோட்டோர பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க உள்ளாட்சிகள் போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.