/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க: அடிக்கடி ஏற்படும் முன்னறிவிப்பில்லா மின்தடை: வெப்பம் தாங்க முடியாமல் பரிதவிக்கும் மக்கள்

ADDED : ஏப் 21, 2024 04:53 AM

மாவட்டம் முழுவதும் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்படும். இந்நேரங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதை அறியும் மக்கள் மின்சார பயன்பாட்டில் ஏதாவது வேலை இருந்தால் மின்தடை ஏற்படும் முன்னே செய்து முடிக்கின்றனர். சில நேரங்களில் முன்னறிவிப்பின்றி மணிக்கணக்கில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வசதி படைத்தவர்கள் இன்வெட்டர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அடித்தட்டு மக்கள் இரவு முழுவதும் துாங்காமல் அவதிப்படுகின்றனர். தேர்வு நேரங்களில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகின்றனர். தொடரும் இப்பிரச்னை குறித்து மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன நடந்தால் தங்களுக்கு என்ன என இருக்கின்றனர்.
இதனால் பல தரப்பு மக்களும் பாதிப்பை சந்திக்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் மின் பயன்பாடுகள் இல்லாமல் மக்கள் வீடுகளில் இருக்க முடியாது. இந்த நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் வயதானவர்கள்,கர்ப்பிணிகள்,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.