ADDED : மே 22, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் பிரனேஷ் தனியார் அலைபேசி நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய சர்வதேச போட்டியில் 170வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தார்.
27 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 2லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இதில் வென்ற மாணவர் பிரனேஷிக்கு தனியார் அலைபேசி நிறுவனம் பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கியது.
மாணவர் பிரனேஷ் 9ம் வகுப்பு பயிலும் போதே தனது கண்டுபிடிப்பிற்காக பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.
வித்யாபார்த்தி கல்வி குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

