/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சென்ட்ரிங் பொருளை வாடகைக்கு எடுத்து வடிவேலு படம் பாணியில் ஏமாற்ற முயற்சி
/
சென்ட்ரிங் பொருளை வாடகைக்கு எடுத்து வடிவேலு படம் பாணியில் ஏமாற்ற முயற்சி
சென்ட்ரிங் பொருளை வாடகைக்கு எடுத்து வடிவேலு படம் பாணியில் ஏமாற்ற முயற்சி
சென்ட்ரிங் பொருளை வாடகைக்கு எடுத்து வடிவேலு படம் பாணியில் ஏமாற்ற முயற்சி
ADDED : ஏப் 28, 2024 04:42 AM
வேடசந்துார் : ரூ.20 லட்சம் மதிப்புள்ள கட்டட சென்ட்ரிங் பொருட்களை வாடகைக்கு எடுத்து சென்ற நபர், பொருட்களையும், வாடகையையும் தராத நிலையில், நான் எப்போது பொருட்களை திரும்ப கொடுக்கிறேனோ, அப்போது வாடகை கொடுக்கிறேன் என,நடிகர் வடிவேலு சினிமா படம் பாணியில் ஏமாற்ற முயற்சித்த சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வேடசந்துார் காந்திநகரில் கட்டட சென்ட்ரிங் வேலைக்கு தேவையான இரும்பு தகடுகள்,இரும்பு குழாய்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் ஈஸ்வரன். இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 8 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாடகைக்கு எடுத்து சென்றார். 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் ஈஸ்வரன் இறந்து விட்டார். ஈஸ்வரனின் மனைவி , மகன் ஆகியோர் வாடகை பொருட்களை எடுத்துச் சென்றவரிடம் வாடகை கூட தர வேண்டாம். பொருட்களையாவது தாருங்கள் என கேட்டுள்ளனர்.
வாடகைக்கு எடுத்தவரோ, தனக்கு தொடர்ந்து வேலை உள்ளதால் பொருட்களை ஒப்படைக்க முடியவில்லை. எப்போது ஒப்படைக்கிறேனோ அப்போது வாடகை கொடுத்து விடுகிறேன் என,
நடிகர் வடிவேலு நடித்த சினிமா படத்தில் 'வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு சைக்கிளை விடும் போது எப்போ சைக்கிளை விடுவேனோ அப்போ வாடகை தருகிறேன்' என கூறுவது போல் கூறி உள்ளார்.
ஈஸ்வரனின் மனைவி, மகன் வேடசந்துார் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி எஸ்.ஐ., பாண்டியன் விசாரித்த போதும், பொருட்களை எப்போ ஒப்படைக்கிறேனோ அப்போ வாடகை கொடுக்கிறேன் என, வடிவேல் சினிமா பாணியில் கூறினார். இதை கேட்ட போலீசார், பொருட்களை கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
'அந்த கதையெல்லாம் இங்கே வேண்டாம். பொருட்களுடன் வாடகையை கொடு. இல்லையேல் வழக்கு பதியப்படும்' என போலீசார் கூறியதை தொடர்ந்து 15 நாள் அவகாசம் கேட்டுள்ளார். அதன்படி அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

