/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் ஆந்திரா தக்காளி
/
ஒட்டன்சத்திரத்தில் ஆந்திரா தக்காளி
ADDED : ஜூன் 10, 2024 05:27 AM

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால் ஆந்திராவிலிருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை, சாலைப்புதுார், கள்ளிமந்தையம் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் தக்காளி இங்குள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூரிலிருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது. முகூர்த்த சீசன் காரணமாக தக்காளியின் தேவை தற்போது அதிகரித்தது.
இதனை அறிந்த கமிஷன் கடை உரிமையாளர்கள் ஆந்திராவிலிருந்து தக்காளியை வாங்கி வந்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். நேற்று 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று ரூ. 600 க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.43 க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து விட்டதால் ஆந்திராவில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது என்றார்.