ADDED : ஏப் 27, 2024 02:03 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.,1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால்   கைது செய்யப்பட்டார்.    திண்டுக்கல் நீதிமன்றத்தில்  தினமும்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன்    ஜாமின்  வழங்கப்பட்டது.  அவரும்    கையெழுத்திடுகிறார்.
தினமும்  கையெழுத்து  உத்தரவை ரத்து செய்ய கோரி   நீதிமன்றத்தில் அங்கித்திவாரி  மனு செய்திருந்தார்.   விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா, ஏப்.,29ல் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் இம்மனுவை தள்ளுபடி செய்தார்.

