ADDED : செப் 16, 2024 06:10 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.எல்.ஏ., காந்திராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலளார்கள் வெள்ளி மலை, நெடுஞ்செழியன் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலாளர் மருதராஜ்,அம்மா பேரவை செயலாளர் பாரதிமுருகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் பங்கேற்றனர்.
நத்தம் ரோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், முத்தையா, ஜெயராமன், மண்டல தலைவர் பெருமாள் பங்கேற்றனர்.
வடமதுரை: வடமதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார் நடந்தது.
வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி திருப்பதி பங்கேற்றனர்.
கள்ளிமந்தையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ் , ஒன்றிய துணைத் தலைவர் தங்கம், கிளை செயலாளர் கோதண்டராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி பங்கேற்றனர்.