ADDED : பிப் 24, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை., என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்களான இளங்கலை சிவில் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு மாணவர் ருத்ரன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும், இளங்கலை பொருளாதாரம் 3ம் ஆண்டு மாணவர் மதன்குமார் சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, பல்கலை., சார்பில் பாராட்டு விழா நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நாகமணி வரவேற்றார். சென்னையில் தமிழக துணை முதல்வர், என்.எஸ்.எஸ்., திட்ட வட்டார இயக்குனர் சாமுவேல் செல்லையா மாநில திட்ட அதிகாரி குணாநிதி ஆகியோரிடம் பாராட்டு பெற்று பெருமை சேர்த்ததாக கூறினர்.-

