/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீங்கள் சமூக சேவகரா; விருதுக்கு அழைப்பு
/
நீங்கள் சமூக சேவகரா; விருதுக்கு அழைப்பு
ADDED : மே 03, 2024 06:34 AM
திண்டுக்கல்: '' திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த சமுதாய சேவையாளர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்'' என கலெக்டர் பூங்கொடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமுதாய சேவையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.ஒரு லட்சம், சான்றிதழ், பதக்கம் உள்ளடக்கியதாகும்.
நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பதாரர்கள் ஏப்.1 அன்று 15 வயது நிரம்பியவராகவும்,
மார்ச் 31ல் 35 வயதுக்கு உள்ளாகவும் இருத்தல் வேண்டும். 2023--24ன் சேவைகள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
5ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். உள்ளுார் மக்களின் நற்பெயர்பெற்றிருத்தல் அவசியமாகும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவன, பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
தகுதியுடையோர் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே 15 மாலை 4:00 மணிக்குள் விண்ணப்பக்கலாம்.
விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு , இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ, 74017 03504 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி அழைப்பு விடுத்துள்ளார்.