/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொள்ளை வழக்கில் இலங்கை வாலிபருக்கு பிடிவாரன்ட்
/
கொள்ளை வழக்கில் இலங்கை வாலிபருக்கு பிடிவாரன்ட்
ADDED : ஆக 03, 2024 12:09 AM
செம்பட்டி:அரசு பஸ்சில் நடந்த கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இலங்கை வாலிபருக்கு ஆத்துார் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததால் அவரை செம்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.
1993 ஜன. 10ல் தேனியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் வீரசிக்கம்பட்டி அருகே அதே பஸ்சில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, விளையாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது. பயணிகள்,டிரைவர் , கண்டக்டரிடம் நகை, வாட்ச், ரூ.1.35 லட்சத்தை பறித்து தப்பியது.
செம்பட்டி போலீசார் இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மதுரை ஆனைமலை அகதி முகாமின் மாதவன், இதே பகுதி நியூட்டன் கிறிஸ்டி, மோகன் , மதுரை பெரியார் நகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஆனந்தன், அசோக் , ரூபன் ஆகியோரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை தொடரும் நிலையில் 2021 மார்ச் 6 முதல் ஆனந்தன் தலைமறைவானார். இவரை செப். 5ல் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பித்து ஆத்துார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயசங்கர் உத்தரவிட்டார். ஆனந்தனை செம்பட்டி தேடிவருகின்றனர்.