/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜிகர்தண்டாவில் செயற்கை வண்ணம்: அபராதம்
/
ஜிகர்தண்டாவில் செயற்கை வண்ணம்: அபராதம்
ADDED : ஏப் 24, 2024 06:16 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் முகமதியாபுரத்தில் ஜிகர்தண்டாவில் அதிக செயற்கை வண்ணம் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 2 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் மக்கள் ஜூஸ் கடைகளுக்கு சென்று ஜிகர்தண்டா,ரோஸ்மில்க்,பழஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்கின்றனர். இதில் சில கடைக்காரர்கள் அதிகளவில் செயற்கை வண்ணங்களை கலக்கின்றனர்.
இதனால் பொது மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் முகமதியாபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள 2 ஜூஸ் கடைகளில் விற்பனைக்கு இருந்த ஜிகர்தண்டாவில் அதிக செயற்கை வண்ணம் இருந்தது தெரிந்தது.
உடனே அதிகாரிகள் 2 கடைகளுக்கும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து வியாபாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

