/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொசு உற்பத்திக்கு துணைபோகும் செயற்கை நீருற்று
/
கொசு உற்பத்திக்கு துணைபோகும் செயற்கை நீருற்று
ADDED : ஆக 13, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாநகராட்சி நுழைவு பகுதியில் செயற்கை நீருற்று உள்ளது. இது முக்கியமான விழாக்காலங்களில் மட்டும் பயன்பாட்டிலிருக்கும் மற்ற நேரங்களில் கேட்பாரற்று கிடக்கும். மழைநேரங்களில் தேங்கும் நீரை யாரும் கண்டுகொள்ளாமலிருப்பதால் மாதக்கணக்கில் தேங்க கொசு உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. நகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் நடக்கும் கொசு உற்பத்தியை தடுக்க மறந்து விட்டனர்.
............
சுத்தப்படுத்தப்படும்
மாநகராட்சி அலுவலகம் செயற்கை நீருற்றை சுத்தப்படுத்துவதோடு மழைநீர் தேங்காமல் தடுக்கப்படும் .
ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.

