ADDED : ஆக 08, 2024 05:19 AM
கள்ளிமந்தையம்: தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பூரணி அறிக்கை : புரதச்சத்து அளிக்கக்கூடிய பயறு வகைகளில் துவரை முதலிடத்தை பெறுகிறது. இதில் 22 சதவீத புரதச்சத்து உள்ளது.
ஆடிப்பட்டம் (ஜூலை, ஆகஸ்ட்) பருவத்தில் துவரையை பயிரிட வேண்டும். எல்.ஆர்.ஜி.52, ரகம் 165 முதல் 170 நாட்கள் வயதுடையது. ஒரு ஏக்கருக்கு 600 ல் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். வாடல் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஊடு பயிர் செய்யும் இடங்களில் உளுந்து பாசிப்பயறு, அவரை, நிலக்கடலை , மொச்சை போன்ற பயிர்களை விதைக்கலாம். சோளத்தை ஊடு பயிராக செய்யும் போது காய்ப்புழுவின் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இரண்டு முறை ஊடுபயிர் சாகுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. துவரை சாகுபடி அதிகப்படுத்தி விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. மானியமாக ரூ .2000 வழங்கப்பட உள்ளது என்றார்.