/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி காப்புக் கட்டு
/
வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி காப்புக் கட்டு
வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி காப்புக் கட்டு
வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி காப்புக் கட்டு
ADDED : ஜூலை 06, 2024 05:59 AM

சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டவாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தை தொடங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் இன்று மாலை மகா வாராஹி ஹோமம், நாளை லகு வாராஹி ஹோமம், தொடர்ந்து அஸ்வாரூடா வாராஹி ஹோமம், சிமாருட வாராஹி ஹோமம், ஜூலை 10 ல் பஞ்சமி திதி அன்று ஊஞ்சல் உற்ஸவம், விளக்கு பூஜை நடக்க உள்ளது.
தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் ஜான்பிள்ளை சந்து வாராஹி அம்மன் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.