/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு
/
பழநியில் சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு
ADDED : மார் 07, 2025 06:55 AM

பழநி : பழநி வந்த சட்டசபை பொது கணக்கு குழு முருகன் கோயில், காந்தி மார்க்கெட் கட்டடப்பணி, நகராட்சி பள்ளி அறிவுசார் மையத்தில் ஆய்வு செய்தனர்.
சட்டசபை பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பழநி வந்தது. காங்., கட்சியினர் மாவட்டச் செயலாளர் சதீஷ், நகரச் செயலாளர் முத்து விஜயன் தலைமையில் இரு பிரிவாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதான கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கான அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்தனர்.
பழநி நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் காந்தி மார்க்கெட் கட்டட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.
பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறிவு சார் மையத்தையும் ஆய்வு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் வந்தனர்.