/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் கைது
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் கைது
ADDED : செப் 05, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கன்னிமேக்கிபட்டியைச் சேர்ந்த அர்ஜுன்ராஜா மனைவி சரண்யா, 35, தன் நிலத்தை சப் - டிவிஷன் செய்து பட்டா தரும்படி குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார். சர்வேயர் பாரதிதாசன் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் தர விரும்பாத சரண்யா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். வி.ஏ.ஓ., அலுவலக தற்காலிக பெண் பணியாளர் சுதாவிடம் லஞ்ச பணத்தை சரண்யா கொடுத்தார். பின், சர்வேயர் பாரதிதாசன் அப் பணத்தை பெற்றார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர், அவரதுஉதவியாளரை கைதுசெய்தனர்.