/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் வேண்டும் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஆக 18, 2024 07:16 AM
ரெட்டியார்சத்திரம், : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.இச்சங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் இளம்பாரதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.சுப்ரமணி, பொருளாளர் ஜேசுதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ் பேசினார்.
திண்டுக்கல்லில் மாநில மாநாடு நடத்த ஆயத்த பணிகள், மருத்துவமனைக்கு தனி பாதுகாப்பு சட்டம் போன்று பள்ளிகளுக்கு பிரத்யேக சட்டம் கோருதல், தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்ட சேர்க்கை கட்டணத்தை அதே கல்வியாண்டில் வழங்கல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.