ADDED : செப் 07, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் வட்டார வேளாண் துறை ,அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் செயல் விளக்கத் திடலை திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குனர் ராஜா ஆய்வு செய்தார்.
விவசாயிகளின் நிலத்தில் செயல்படுத்தப்படும் தென்னை நார் கழிவு உரம் தயாரித்தல் , வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் நிலக்கடலை விதைப்பண்ணை, பசுந்தால் உரப்பயிர் பயிரிடுதல் செயல் விளக்கத்தையும் பார்வையிட்டார். வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயக்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ராமசாமி, சிவக்குமார், உதவி விதை அலுவலர்கள் கண்ணன், முத்துக்காமாட்சி, அட்மா திட்ட அலுவலர்கள் ராஜேந்திரன், சிவக்குமார், உதயகுமார் பங்கேற்றனர்.