/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராம சாலை பாலப்பணிகள் தணிக்கைக்குழு ஆய்வு
/
கிராம சாலை பாலப்பணிகள் தணிக்கைக்குழு ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 05:29 AM
வேடசந்துார்: வேடசந்தூர் ராமநாதபுரம் - காசிபாளையம் ரோட்டில், ரூ.6 கோடியே 3 லட்சத்தில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் தரம் ,உறுதித் தன்மையை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் பராமரிப்பு கோட்ட பொறியாளர் துரை, நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் அசோக் குமார், திண்டுக்கல் நெடுஞ்சாலை நபார்டு உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், திண்டுக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் மைதிலி பங்கேற்றனர்.