ADDED : ஆக 19, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை ஒன்றிய ஹிந்து குலாலர் சமுதாய நல அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண், கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.
நிர்வாக தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நிதி அறங்காவலர் கதிரேசன் வரவேற்றார்.
அறங்காவலர் ஜெயராமன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அறங்காவலர்கள் சவுந்திரராஜன், பாண்டி, ஆதிராஜன், தங்கராஜ், அழகர்சாமி, வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். நலம் மருத்துவமனை டாக்டர் சிவக்குமார், தமிழ்நாடு கல்வி மேம்பாட்டு கழக மாநில தலைவர் தங்கராசு, கவுரவ தலைவர் கருப்பசாமி, குலாலர் பேரவை தலைவர் சுப்பிரமணி, செயலாளர் கோதண்டபாணி பங்கேற்றனர். அறங்காவலர் முருகன் நன்றி கூறினார்.

