ADDED : மே 03, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் அதிக நாட்கள் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திண்டுக்கல்,தேனி மாவட்டத்திலுள்ள 15 பணிமனைகள்,புதுப்பிக்கும் பிரிவுகளில் பணிபுரிபவர்களில் 2023-2024ல் அதிகப்படியான நாட்கள் யாரெல்லாம் பணியாற்றினார்கள் என விவரம் சேகரிக்கப்பட்டது. வேடசந்துார் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர் ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். நேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.