ADDED : பிப் 24, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டப்பணிகள், நீர் சேமிப்பு அவசியம் குறித்த பிரசார நிகழ்ச்சி சிங்காரக்கோட்டையில் நடந்தது. மத்திய நில வளத்துறை நிபுணர் பிரகாஸ் குமார் தலைமை வகித்து கிராம மக்கள், தன்னார்வலர்களுடன் நடைபயணமாக சென்று புதுக்குளம் கால்வாய் சீரமைத்தல் பணியை துவங்கி வைத்தார். பள்ளியில் நீர்வடிப்பகுதி திட்டம், நீர் சேமிப்பு அவசியம் குறித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண்மை உதவி இயக்குநர் மணமல்லி, மாவட்ட அலுவலர் பாண்டியன், உதவிப் பொறியாளர் சகாயராஜ் பங்கேற்றனர்.